Posts

கானல் நீர்!

நீ  இல்லாத  நிஜத்தை  விட , நீ  இருக்கும்  கனவு  சுகமாகத்தான்  இருக்கிறது, .கண்  விழிக்கும்  வரை ??!!

தனிமை!

நான்  தனியாய்  இருக்கையில்  தனிமையை  உணரவில்லை, தனிமையாய் உணர்கையில்  தான்  தனியாய்  இருக்கிறேன்!

இயற்கை!

நீல  வானம் , நிறைந்த நிலவொளி , நிசப்தமான  நேரம் , நிம்மதியான  காற்று , கனிவான  குயிலோசை, சொட்டும்  அழகு,  கண்டிப்பாக  சொர்க்கம்  இது !! வருடிச்  செல்லும் காற்றிடம்  வாழ்த்துக்கள்  பெறலாம், துயரங்கள்  மறந்து  துயில்  கொள்ளலாம், நிலவுலகம்  விட்டு, கனவுலகில்  பயணம்  செய்யலாம், இதோ  மனம்  என்னும்  பறவை  சிறகை   விரிக்கத்   தொடங்குகின்றது !!

ஜல்லிக்கட்டு!!

நானும் ஒருத்தி தான், இது வரை அறியாமையில் அமுங்கிக் கிடந்தவர்களில் நானும் ஒருத்தி தான்!! ஏறுதழுவுதல் மிருகவதை என எளிதாய் ஏமாற்றப்பட்டவர்களில் நானும் ஒருத்தி தான்!!! காளை அடக்குதலை கண்ணெதிரே கண்டதில்லை, களத்தில் இறங்குவோரிடம் கலந்துரையாடியதில்லை,  தெளிவாய் தெரிந்தவர்களிடம் தீர விசாரிக்கவும் இல்லை, எனினும் ஜல்லிக்கட்டு என்பது, முரட்டு மனிதர்கள், மிருகவதை, மரண அபாயம் என சுருங்கிய சிந்தனையுடன் சிறுபிள்ளையாய் இருந்தவர்களில் நானும் ஒருத்தி தான்!!! இதோ கடற்கரையில் ஒரு கண்திறப்பு!!! சிறுவர் முதல் பெரியவர் வரை, சிந்தனையில் ஒன்றுபட்ட தமிழ் சமுதாயம், பெண்களுடன் குழந்தைகளும் குதூகலமாய் கூடி நின்று, உரிமைக்குரல் எழுப்பும் உலக அதிசயம்!!! கருமமே கண்ணாய், கருத்தொருமித்து, கண்ணியம் குறையாமல், கடற்கரையில் களப்போராட்டம், ஆனந்த அதிசயமாய் ஒரு அறப்போராட்டம்!! கன்னியரும் காளையரும் கடற்கரையில் கை கோர்த்தாலும், அதில் காதல் இல்லை, கலாசாரம் காப்பதற்கான கடமை மட்டுமே!! இடி மின்னல் மழை தாண்டி, ஐந்து இரவு பகல் தாண்டி, பொறுமை விடாமல், வன்முறை தொடாமல், வாடிவாசல் திறப்பதற்காய் வழி மேல் விழி வைக்

கோபம்!

நானாகப் பேசுவேன் என நீ காத்திருக்கிறாய்,  நீயாகப் பேசுவாய் என நான் காத்திருக்கிறேன்,  நமக்காக காத்திருக்காமல் மௌனமாகவே நழுவி விடுகிறது, நாம் வீணாய் விரயம் செய்த அந்த நிமிடம்!!!

வேண்டும், வேண்டும்!!

கடந்து போன நாட்கள்  வேண்டும், கலைந்து போன கனவுகள் வேண்டும்! இழந்து விட்ட உறவுகள் வேண்டும், இனிமையான நினைவுகள் வேண்டும்!